கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் உத்தரவின்பேரில் கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில் அவுட் காய் என்ற பழங்களில்/மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டுகளை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களை ரகசிய தகவல் அறிந்து பிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இம்மாதிரியான நாட்டு குண்டு தயாரிப்பில் வெள்ளியங்காட்டை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஈடுபடுகிறார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை சரகர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய தனி குழு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் போது இன்று (15.9.2020) சீலியூர் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த
மூர்த்தி, வயது 48.
த/பெ கருப்புசாமி என்பவரை பிடித்து விசாரணை செய்து சீலியூரில் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது ஏர்கன் மற்றும் நாட்டு வெடி குண்டு செய்வதற்கு தேவைப்படும் வெள்ளை நிற வெடிமருந்து மற்றும் கரி மருந்து மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது மேல் நடவடிக்கை தொடர இவரை காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அவுட் காய் என்ற பழங்களில்/மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.