கோக்கு மாக்கு

ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் என்பவர் படுகொலை

ஓசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்

ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் என்பவரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத் (35) இவர் கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார். நேற்று இரவு தனது இளைய மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக குந்துமாரணப்பள்ளி பேக்கரி கடையில் கேக் வாங்கி உள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே தகறாரு நடந்துள்ளது இந்த தகராறை அவர் தீர்த்து வைத்து உள்ளதாக கூறப்படுகிறது இதில் ஒரு ஒரு தரப்பினர் அவர் மீது கடுமையாக கோபம் கொண்டனர் தங்களுக்கு ஆதரவாக ஏங்கநாத் நியாயம் பேசவில்லை எனக் கூறி கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் ரங்கநாத்தின் வீட்டுக்கு சென்ற அந்த கும்பல் அவரை வீட்டில் இருந்து வெளியே வருமாறு கூறி ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் இதனையடுத்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவரது உடல் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது தொடர்ந்து போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதியளித்தனர். ஆனாலும் இன்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் கிராமமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் கெலமங்கலம் ஓசூர் இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்கிறோம் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல தேன்கனிகோட்டை நகரிலும் பாஜகவினர் ரங்கநாத்தை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோசங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button