மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக பொதுமக்கள் நலன் கருதி 21.09.2020 முதல் காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 வரை வாரந்தோறும் திங்கட்கிழமை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளதால் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் செயல்பட தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்
10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு அதிகாகமாக உள்ள பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் வர அனுமதி கிடையாது மற்றும் வருவதையும் தவிர்க்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளாமல் அவர்கள் சார்பாக அவர்கள் ரத்த சம்மந்த உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மனு அளிக்க ஏற்பாடுகள் செய்திட வேண்டும்
ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் தூய்மை பணி செய்வதை உறுதி செய்து கூட்டம் நடத்தப்பட வேண்டும்
அதிக அளவு கூட்டம் சேருவதைத் தடுத்திட முன்னேற்பாடுகள் செய்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்
அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் அனைத்து அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் உடல் வெப்ப நிலை குறித்து பரிசோதனை செய்திட வேண்டும் மேலும் கைகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்
மனுதாரர் உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கும் தனிவழி அமைத்திட வேண்டும்
ஒரு கவசம் அணியாதவர்களுக்கு உடன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்
காய்ச்சல் சளி இருமல் உள்ள நபர்களை அனுமதிக்கக் கூடாது
சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலரிடம் தகவல் தெரிவித்து மருத்துவப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திட வேண்டும்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்/நகராட்சி பணியாளர்கள் மூலம் அலுவலக வளாகம் முழுவதும் தூய்மை படுத்திருப்பதை கிருமிநாசினி தெளிப்பதை உறுதி செய்திட வேண்டும்
நேரில் வரமுடியாத மனுதாரர்கள் E-Sevai இ-சேவை மூலமாக கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் உதவி ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் மனுக்களை பொதுமக்களிடமிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள் அதன் அடிப்படையில் அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்பட்டது
- திண்டுக்கல் மேற்கு ஆயுசி சிங்.இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி), திண்டுக்கல்
- திண்டுக்கல் கிழக்கு இந்திரவள்ளி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திண்டுக்கல் - ஆத்தூர் சிவக்குமார் தனித்துணை ஆட்சியர், திண்டுக்கல்
- நத்தம் உஷா வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல்
- நிலக்கோட்டை ராஜராஜன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல்
6.பழனி அசோகன், வருவாய் கோட்டாட்சியர், பழனி
- ஒட்டன்சத்திரம் செல்வராஜ் உதவி ஆணையர் (கலால்), திண்டுக்கல்
8.வேடசந்தூர் கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர், திண்டுக்கல்
9.குஜிலியம்பாறை விஸ்வநாதன், துணை ஆட்சியர்(பயிற்சி), திண்டுக்கல்
10.கொடைக்கானல் சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப.,
உதவி ஆட்சியர், கொடைக்கானல்
இவ்வாறு செயல்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தெரிவித்தார்.