*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு*
*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.*
*காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.*
*இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு “பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி. பாஜகவில் சிறப்பாக செயல்படுவேன். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.*