க்ரைம்செய்திகள்

கரு கலைக்க கொடுக்கபட்ட விஷத்தால் தாயும் உயிரிழப்பு ..

திருப்பத்தூர்

மாவட்டம்

*திருப்பத்தூர் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு மாதக் குழந்தையை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் தாயும் சேர்ந்து இறந்துள்ளதால் மருத்துவமனையிலேயே விட்டு தப்பி ஓடி தலைமறைவான கணவனை தேடி பிடித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்*

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி அம்பேத்கர் பகுதியை சேர்ந்த காலம் சென்ற கூலி தொழிலாளி சிவா(63) இவரது மனைவி ஜோதி (51) இவர்களுக்கு இரண்டு ஆண் ஒரு பெண். இவர் கூலி வேலைபர்த்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்

சத்தியவதனம் 25 இவர் +2 படித்தவர் வறுமையின் காரணமாக படிக்க வைக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி உள்ளனர்

இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் வசித்துவரும்

அங்கம்மாள் சுப்பிரமணியின் இவரது மகன் மணி வண்ணன் இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார்

இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சம்பிரதாய படி திருமணம் செய்து வைத்துள்ளனர்

பஞ்சாபில் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் மணிவண்ணன் தன் மனைவி சத்தியவதனாவையும் உடன் அழைத்துச் சென்று வாழ்க்கை நடத்தி வரும் தருணத்தில் சந்திரவதனா 6 மாத கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் திடீரென யாருக்கும் தெரியாமல் தன் சொந்த ஊரான ஆண்டியப்பனூருக்கு மனைவியை அழைத்து வந்து தன் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து குழந்தையை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் குழந்தை கலைந்ததுள்ளது.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்கும் பொழுது தாயும் சேர்ந்து இறந்ததால் கணவன் மணிவண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் இறந்து விட்ட மனைவியை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்

புகாரின் பேரில் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பி வைக்கப்பட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர் மணிவண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெண்ணின் உறவினர்கள் இது திட்டமிட்டு கொலை என்றும் கொலைக்கு காரணமான மணிவண்ணன் இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய அக்கா மற்றும் அவருடைய தாயார் உள்பட கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button