தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குடி ஊராட்சியில் ஏழைகள், விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசுஅரசின் இலவச கோழிக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை, ஆட்டுக்கொட்டகை அமைத்துக் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அந்தந்த கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே பயனாளியாக பயன்பெற முடியும். கற்குடி ஊராட்சி கற்குடி கிராமம், கட்டளைக்குடியிருப்பு, வேம்பநல்லூர், கேசவபுரம் கிராமத்தில் சிறு பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
கற்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பநல்லூர் கிராமத்தில் முறைகேடாக செங்கோட்டை மேலூரை சேர்ந்த வேம்பநல்லூர் கிராமத்தில் தோப்பு வைத்திருக்கும் திரு. ஜெயினுலாப்தீன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பயனாளியாக தேர்வாகி சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ஆட்டுக் கொட்டகைகள் முற்றிலும் இலவசமாக பெற்றுள்ளார். நகராட்சி பகுதியில் வசிக்கும் ஒரு நபர் எப்படி கிராம ஊராட்சி மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில் பயனாளியாக பயன்பெற முடியும்.
இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. வேம்பநல்லூர் கிராமத்தில் உள்ள இரண்டு நபர்களை ஜெயினுலாப்தீன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தன் கைவசம் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தன் இடத்தை நீண்ட நாள் குத்தகைக்கு விட்டது போல் போலியான ஆவணங்களை தயார் செய்து செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிந்து தான் இந்த முறைகேடு நடந்துள்ளது.
இந்த முதல் குற்றவாளி ஊராட்சி செயலாளர் திரு. பண்டாரம் அவர்கள். இரண்டாவது குற்றவாளி இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள். மூன்றாவது குற்றவாளி ஆட்டுக்கொட்டகை அமைக்க எந்த ஆவணங்களையும் ஆய்வு செய்யாமல் கொட்டகைக்கான அளவீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கிய MGNEGS துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் ஆவார்.
நான்காவது குற்றவாளி ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர், திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(ரெகுலர்) ஆவர்.
கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஏழைகளை பயனாளிகளாக சேர்க்காமல் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் திட்டம் என்பதால் பெரும் பணக்காரர்கள் பயன்பெறும் வகையில் செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்பட்டுள்ளனர்.
திட்ட மதிப்பீடு, பயனாளி பெயர், திட்டத்தின் பெயர், கட்டிக் கொடுக்கப்பட்ட ஆண்டு ஆகியவை வெள்ளை வர்ணம் பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இதில் ஊழல் நடந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
எனவே இதற்கு உடந்தையாக செயல்பட்ட அத்தனை அதிகாரிகளையும் துறை ரீதியான நடவடிக்கையும், சட்ட ரீதியான நடவடிக்கை யும் எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கும் அவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் விசில் செய்திஐளுக்காக வீரமணி