_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_
*_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது._*
_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ளது ஒருங்கிணைந்த நீதிமன்றம் இந்த நீதிமன்ற நுழைவாயில் அருகே திங்கள்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவர் தன் கையில் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் தலை வழியே ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்_
*_இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் மற்றும் நீதிமன்ற பணியிலிருந்த காவலர்கள் மண்ணெண்ணெய் கேனை தட்டிவிட்டு அவரைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்_*
_இதைத்தொடர்ந்து நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் கருத்தப்பாண்டி, முத்துச்சாமி, மற்றும் சக்திவேல் மற்றும் காவல்துறை விரைந்து சென்று வாலிபரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் அவர் பெயர் பாலசுப்ரமணியம் என்பதும் வயது 32 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது._
*_இதனைத் தொடர்ந்து குடும்ப பிரச்னை காரணமாகத் தீக்குளிக்க முயன்றாரா அல்லது வேறு காரணத்திற்காக தீக்குளிக்க முயன்றாரா என்று தொடர் விசாரணையை நகர் காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்._*
_ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது._
விசில் செய்திகளுக்காக சிவகாசியிலிருந்து ஷாகுல் ஹமிது