🔸 *வேலூர் மாவட்டம் எழில்
*வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கிதருவதாக ரூ.57 லட்சம் மோசடி பாதிரியார் சாதுசத்தியராஜ் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டசெயலாளர் தேவா உள்ளிட்ட மூன்று பேர் கைது*
*வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டம் காரணிபாக்கம் புதுச்சேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகனுக்கு சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்றுதருவதாக கூறி 2017 ஆம் ஆண்டு ரூ.57 லட்சம் பணத்தை சாய்நாதபுரத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றும் சாது சத்தியராஜ் தமிழக முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் தேவா,அவரது தம்பி அன்புகிராங்க் ஆகிய மூவரும் பணம் பெற்றுள்ளனர்.*
*இதுவரையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் வாங்கி தரவில்லை அத்துடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதுடன் பணத்தை திருப்பி தரமறுத்துள்ளனர்.*
*இதுகுறித்து சீனிவாசன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.*
*இதன் அடிப்படையில் போலீசார் தேவா,சத்தியராஜ் ,அன்புகிராக் ஆகிய 3 மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் .*
*பாதிரியார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
*தேவா மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது .*
*மேலும் அவர் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு நிலுவையில் உள்ளது*