தனியார் அருவிகளும் தவிக்கும் மக்களும்
.
குற்றாலத்தில் கொரோனா குளிக்க தடை என்றதும் பொதுமக்கள் தனியார் அருவிகளை நோக்கி படையெடுக்கின்றனர் தனியார் அருவி உரிமையாளர்களும் இதுதான் சமயம் என ஒரு மணி நேரத்துக்கு 2000 முதல் 2500 வரை வசூலிக்கின்றனர்
.
மேக்கரையை சுற்றி முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளதாக தகவல்
.
ஆனால் மாவட்ட நிர்வாகத்திற்கு இதை பற்றி ஒன்றுமே தெரிவதில்லை
.
கடந்த மாதம் எருமைச்சாடி அருவியில் போதையில் குளித்த நபர் பாறையில் விழுந்து உடனடி மரணம் ஆனதாக சொல்லப்படுகிறது
.
ஆனால் இதைப்பற்றி வெளியே தெரியாமல் மறைத்து விட்டதாக தகவல்
.
திருவாடுதுறை ஆதீனமடத்தை சார்ந்த இடங்களில் மலையிலிருந்து பொதுவாக ஒரு ஓடை வருகிறது
.
அந்த ஓடை எந்த இடங்களை ஒட்டி வருகிறதோ அந்த இடத்தின் உரிமையாளர் உடனே ஓடையை மறித்து உயரமாக கட்டி செயற்கை அருவியை உருவாக்கி தண்ணீரின் போக்கையே மாற்றிவிடுகின்றனர்
.
பொது ஓடையில் மறித்து கட்ட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்ததுனே தெரியல
.
இந்த அருவிகளில் குளித்தால் கொரோனா பரவாது தடை செய்யப்பட்ட சோப்பு ஷாம்பூ எண்ணெய் உபயோகித்துக்கொள்ளலாம்
குளிக்கும் போதே மது அருந்திக்கொள்ளலாம் மனங்கவர் பெண்களோடு ஒன்றாகவே குளித்துக்கொள்ளலாம் இரவு வேட்டையாடி கறி சமைத்து உண்ணலாம்
.
யாரும் எதற்கும் தடை விதிப்பதே கிடையாது மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிந்தே தான் நடக்கிறது
.
இன்றைய நிலையில் எத்தனை அருவிகள் உள்ளது என்றும் அதில் என்னவெல்லாம் நடக்கிறது என்றும் அதன் உரிமையாளர்கள் யார் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முழுமையான தகவல் இருக்காது
.
இதே நிலை தொடர்ந்தால் ஓடையின் போக்கு முழுவதும் மாற்றியமைக்கப்பட்டு மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வயல் வெளிகள் முழுவதும் தண்ணீரில் கண்டிப்பாக மூழ்கும் அபாயம் உள்ளது
.
இதன் பாசன விவசாயிகள் இவர்களிடம் மல்லுக்கட்ட முடிவதில்லை பணத்தினால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகின்றனர்
.
எனவே மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து ஓடைக்கு இருபுறமும் வேலியமைத்து ஓடையை காக்க வேண்டுகிறோம்
.
இயற்கை தன்னைத்தானே மறுசீரமைப்பு பணியை தொடங்கினால் மட்டுமே திருந்துவாய்ங்க போல
.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!!!???
.
நல்ல வேளை எங்க பக்கத்துல கடல் இல்லை இருந்துருந்தா தனியார் கடலா மாறிருக்கும் ….. என்று செங்கோட்டை மேக்கரை கண்ணுபுளிமெட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புலம்பலாக உள்ளது….உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
.
ங்கொய்யால எங்கள கேக்காம யாரும் உள்ள இறங்க முடியாது!!!
.