RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) பதிலும், அதிர்ந்து போன சமூக ஆர்வலரும்
சென்னையை சேர்ந்த திரு.காசிமாயன் என்பவா் 25-08-2020 ஆம் தேதி முதலமைச்சா் தனிப்பிரிவிற்கு தமிழக காவல்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை காவலர்கள் உயிரிழந்துள்ளனா்.? எந்த மாதிரியான சூழலில் இறந்தாா்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பி பதிலுக்காக காத்திருந்த நிலையில்..
முதலமைச்சா் தனிப்பிரிவிற்கு 25-08-2020 ஆம் தேதி அனுப்பிய மனு, 10-09-2020 அன்றைய தேதிக்கு காவல்துறை இயக்குநா் அலுவலகத்திற்கு தங்களது அலுவலகம் சார்ந்த தகவல் என்பதால் தாங்களே பதில் அளிக்குமாறு Forward செய்துள்ளனா்.
காவல்துறை இயக்குநா் அலுவலகத்தில் எந்த ஒரு தகவலும் இல்லாத காரணத்தினால் இத்தனை நாட்களாக அமைதி காத்து 19-10-2020 இன்றைய தேதிக்கு தாங்கள் தனித்தனியே சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவருக்கு தனித்தனியே மனு செய்து தகவல் பெற்று கொள்ளுமாறு மெத்தனமாக யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலை குறிப்பிடாமலே பதிவு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்தை 10/- ஓவாயில் கடிதமாக பதில் அனுப்பியுள்ளனா்.
இதனை கண்ட சமூக ஆர்வலா் அதிர்க்குள்ளானாா்.
மேலும், தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளையும் உள்ளடக்கிய தலைமை செயலகத்தில் காவல்துறையினாின் இறப்பு தொடர்பான பதிவுகள் இல்லை.?
தமிழக காவல்துறை தலைமையிடத்திலும் தகவல்கள் இல்லை.?
அப்படியானால் மிகப் பெரிய அளவிலான ஏமாற்று வேலைகளும், முக்கியமான பல தகவல்களும் மறைக்கப்படுவது மர்மமாக உள்ளது.
அரசு ஊழியரின் இறப்பு எண்ணிக்கையை சரியாக கூறாத இந்த துறைகள் தான் பொது மக்கள் கேட்டறியும் தகவலை உண்மையாக நேர்மையாக வழங்கப்போகிறதா.? என மனம் வருந்தினாா்.