தமிழர் திருநாளில் மிகவும் பிரசித்தி பெற்றது தீபாவளி திருவிழா. இந்த ஆண்டு கொரனோ கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பல வியாபாரிகள் மிட்டாய் கடைக்காரர்கள் துணி கடைக்காரர்கள் மற்றும் மளிகை கடைக்காரர்கள் ஆகியோர் தீபாவளியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன உடை எடுக்கலாம் என்ன பலகாரம் செய்யலாம் என்ற பட்ஜெட் ஒவ்வொருவர் மனதிலும் எண்ணம்தோன்றும். மேலும் புதுமண தம்பதிகள் புது புது ஆடைகள் எங்கு வாங்கலாம் எந்த கடையில் வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த வருடம் கொரோ கோரப்பிடியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பெரிய ஜவுளிக் கடை நிறுவனங்கள் புதிய மாடல்கள் துணிகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் தீபாவளி வெறும் வலி யா வெறும் வா ளியாகவும் இருக்கலாம். இதனால் வியாபாரிகள் வயிற்றில் புளியை கரைத்தது போல் இருந்து வருகின்றனர்.
