ச. ராஜேஷ் -மாவட்ட நிருபர்
நாகப்பட்டினம்,
21.10.2020
நாகையில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு ; பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி.
படக்காட்சிகள் ; எஸ்பி மற்றும் அதிகாரிகள், நினைவஞ்சலி,
கடந்த 1959 ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு நாகை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல்படை சார்பாக துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.