எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர்
கரூர் 21-10-2020
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏமூர் சீத்தப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் இடைநிலை ஆசிரியை ரமாப்பிரியா இருவரும் ஏழூர் அருகே உள்ள சீத்தப்பட்டி மாரியம்மன் கோவிலை கடக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி 7 அரை பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டனர்.
மேலும் தலைமை ஆசிரியை மணிமேகலை தங்க நகையை கொடுக்க மறுத்ததால் அவர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி மேலும் ஏழரை பவுண் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர்களை வழிமறித்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.