
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிர்க் காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.517.50 பிரீமியம் தொகையும், ராபி உளுந்து பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 297.7 பிரீமியம் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அருகேயுள்ள பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வருகிற 30-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ. கண்ணகி தெரிவித்தார்.