கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் வசூலித்து நூதனமாக பல ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பலே கும்பலால் பரபரப்பு.
சமூகஆர்வலர் தலைமையில் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் கணேசபுரம் வட்டார பகுதிகளில் இன்று காலை 3 பெண்கள் உட்பட ஒரு கும்பல் வீடு வீடாகச் சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவர்களது குடும்ப அட்டையை கேட்டுப் பெற்று ஆய்வு செய்தனர் அதன்பின்பு அவர்களிடமிருந்த பச்சை வண்ண அட்டையை கொடுத்து அந்த அட்டையை ரேஷன் அட்டையோடு எந்த ரேஷன் கடையில் கொடுத்தாலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர் பத்து ஆண்டுகளுக்கு இதே ரேஷன் அட்டையுடன் இதே பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர் இவற்றிற்கு கட்டணமாக தலா 30 ரூபாயும் வசூல் இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிய இவர்களின் பேச்சை நம்பிய பொதுமக்கள் வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீட்டைச் சேர்ந்த பெண்கள் போட்டி போட்டு பணத்தை கொடுத்து அட்டையை பெற்றுக் கொண்டனர் அதன்பின்னர் சிலர் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் விசாரித்தபோது இவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி சென்றது தெரியவந்தது அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சந்திப்பில் திரண்ட பொதுமக்கள் உடனடியாக ஏமாற்று மோசடி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் ரேஷன் அட்டையின் பெயரில் நூதன மோசடி செய்த கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குமரிமாவட்ட போட்டோகிராபர் ப்ரஜித்