புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசு.. திருமண விழாவில் ருசிகரம்..!
திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயம் பரிசளித்த ருசிகர சம்பவம் பொன்னேரியில் நடந்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் புதுமணத் தம்பதிக்கு பரிசாக அளித்தனர். வெங்காயம் பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.