இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திரு.கோபீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90 Degree push ups) செய்து, ஏற்கனவே இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் புதிய. உலக சாதனையாக பதிவு செய்துள்ளார்.
இந்த உலக சாதனை முயற்சியை நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்து சான்றளித்து கௌரவித்தார் நமது நிறுவனத்தின் கோயம்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் திரு. பிரபு அவர்கள்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமை செயற் குழு அனைத்தையும் காணொளி ஊடாக ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். விசில் செய்தியாளர் திருமுருகன்