ஊழல் செய்பவர்களை தூக்கில் போட்டால் தான் நாடு முன்னேறும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு,
ஊழலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அப்போது, ஊழலில் ஈடுபவோரை தூக்கில் போடவேண்டும் என்றும் அப்போது தான் நாடு முன்னேறும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
வெங்காய விலை உயர்வு பற்றி பேசும் அதேவேளையில், வெங்காய சாகுபடிக்கு உரம், கூலி உள்ளிட்டவை உயர்ந்திருப்பது குறித்து யாரும் கூறவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலை என்ன? அவர்கள் வாங்கிய ஊதியம் என்ன? அதே காலகட்டத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நிலை என்ன? ஊதியம் என்ன? என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன்