நெல்அறுவடை பாதிப்பா
சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் ஆலங்குளம் மாறாந்தை நெல்லை டவுன் பேட்டை ஆகிய இடங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சாலையோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஒரு சில வாகன ஓட்டிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்குவதற்கு நனைந்தவாறு சென்றதை காண முடிந்தது. மேலும் இருசக்கர நான்கு சக்கர வாகன போட்டிகள் முகப்பு விளக்கை பெரிய விட்டபடி சென்றனர். ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் கடை தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்ஜெட் போடுவதற்கு புதுமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் புது ஆடைகளை வாங்குவதற்கு ஆர்வமாக குவிந்திருந்தனர். இதனால் கடைத்தெருவில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதமான சூழ்நிலை காரணமாக குற்றாலம் பாபநாசம் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை விதித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.