இந்தியாவிலேயே குரங்குகளுக்கு சாலையில் நீச்சல் குளம. அமைத்து தந்துள்ள ஒரே ஊர் குற்றாலம் மட்டுமே ஆம்……பல கோடி ரூபாய் வருமானம் உள்ள சுற்றுலாத் தலம் குற்றாலம் ஆகும் ஆனால் அடிப்படை வசதிகள் இந்த பகுதியில் இல்லை என்பது நிதர்சன உண்மையாகும்.. வீடுகள் கட்டுவதற்கு அப்ரூவல் வாங்குவதற்கு மின்சார இணைப்பு வாங்குவதற்கு வீட்டு வரி சொத்து வரி எண்ணற்ற பல வரிகளை இந்த பகுதியில் வசிக்கக் கூடியவர்களை அளித்தும் அடிப்படை சாலை வசதி இல்லை. தெரு விளக்கு இல்லை… குற்றாலம் பராசக்தி நகரில் பொது குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் கிடையாது… குற்றாலம் பராசக்தி நகரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காணவில்லை.அந்த இடத்தில் அரசியல் பிரமுகர்கள் கட்டிடம் கட்டி இருப்பது வியப்பாக உள்ளது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தலை புறக்கணிக்க இந்த பகுதி மக்கள் முடிவு செய்திருக்கின்றனர்.அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து பல ஊழல் ஈடுபட்டு வருகின்றனர்… மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபோதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
விசில் வீரமணி செய்தியாளர்