இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் வீதி மக்கள் வெள்ளம்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஒரு கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்த எந்த விதமான அச்சம் இல்லாமல் விமர்சையாக கொண்டாடினார்கள்.பட்டாசு மற்றும் பலகார கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவர் முதல் பெரியவர் வரை சாலைகள் ஆங்காங்கே வீட்டு வாசகர்கள்பட்டாசு வெடிதும், வீட்டில் செய்த பலகாரங்கள் இனிப்பு வகைகளை பக்கத்து வீட்டில் பரிமாறி கொடுத்து மகிழ்ந்தனர். கோயிலின் நடை திறக்கப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில கோவில்கள் அதிகாலை முதல் நடை திறந்ததும் பூஜை செய்தனர். முக கவசத்துடன் வழிபட்டு சென்றனர்.