விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்குதல், வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வாய்ப்பு, வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் பகுதி 2 கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகஸ்தியராஜன் தலைமை வகித்தார். சுரேஷ் பாபு, ரவீந்திரன், இசக்கி ராஜன் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாற்றுத் திறனாளிகள் உள்பட 107 பேரை போலீஸார் கைது செய்தனர்.