புரெவி புயல் இலங்கையைக் கடந்து பாம்பனுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள நிலையில் புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை 6 மாவட்டங்களுக்கும் பொதுவிடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதற்கு ஈடாக 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு பணிகளுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.