திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நிரம்பியதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு மேல் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுற்றுப்புற கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும். எனவே கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.