வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு
நிவாரண உதவிகள் வழங்கினார்
புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜெயராம் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்திற்கு நேரில் சென்ற காவல் துறைத் தலைவர் ஜெயராமன், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் வீடுகளில் தங்க முடியாத மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்தார். மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தினார்.
https://youtu.be/Ry9kitmqftw