விவசாயிகளுக்கு ஆதரவாக
நாளை நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு ..
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வினர் தொடர்ந்து 12 வது நாளாக அறவழிப் போராட்டத்தின் மூலமாக டெல்லியில் போராடி வருகிறார்கள்
விவசாயிகளின் கோரிக்கையை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம்
மூன்று வேளாண் சட்டங்களையும் , மின்சார திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடும் குளிரில் விவசாயிகளின் குழந்தைகள் , பெண்கள் , முதியவர்கள் என அனைவரும் போராடி வருகிறார்கள் ..
இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நாளை 08-12-2020 செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை இந்திய முழுவதும் பொதுவேலை நிறுத்தம் அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசு அலுவல சங்கங்கள் , தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள், விவசாயச் சங்கங்கள், வணிகர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் பாரத் பந்த்-திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தங்களது சக்திக்கு உட்பட்டு மக்களை திரட்டி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைமை சார்பாக கோருகிறோம்
மக்களுக்காக சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதை மத்திய பாசிச பாஜக அரசுக்கு உணர்த்த வேண்டும்
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹீம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்