செய்திகள்

*காவல்துறையினர் இல்லாமல் 1 மணி நேரம் கூட இருக்க முடியாது – நீதிபதிகள்.*

சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருக்கலாம் ஆனால் காவல்துறையினர் நமக்கு தேவை – நீதிபதிகள்

தமிழ்நாட்டில் எத்தனை காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – நீதிபதிகள் கேள்வி

*தமிழக காவல் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தர கோரிய வழக்கு…*

கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், “தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். குறிப்பாக விஐபிகள் வரும் காலங்களிலும் சாலை ஓரங்களில் நின்றும் பொதுமக்களை பாதுகாக்கும் பணி செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த அளவு 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மத்தியபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 38,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் 40 ஆயிரம் வரையிலும், மேற்கு வங்காளத்தில் 28500, மகாராஷ்டிராவில் 29 ஆயிரத்தில் இருந்து 34 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஏழை நாடான உகாண்டாவில் கூட 47 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மழை வெயில் போன்றவற்றை பாராமல் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு, வெறும் 18 முதல் 20 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் போலீசாக நியமிக்கப்படும் 90 சதவீதத்தினர் அவர்களது வீட்டிலிருந்து சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவிலேயே பணியில் நியமிக்கப்படுகின்றனர் . எனவே அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக்குறைந்த ஊதியமானது அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு போதிய அளவில் இல்லாமல் உள்ளது. எனவே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக போலீசாரின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். அதேபோல் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அவர்கள் விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள் காவல்துறையினர் இல்லாமல் 1 மணி நேரம் கூட இருக்க முடியாது. போக்குவரத்து காவல்துறையினர் இல்லாமல் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாது. சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருந்தாலும் காவல்துறையினர் நமக்குத் தேவை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காவல்துறையினர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என கருத்து தெரிவித்தனர்.

மேலும்

1) காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?

2) காவல் துறையினருக்கு சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா?

3) காவல்துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது?

4) காவல் துறையினருக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல்

5) காவல் துறையினருக்கு என சிறப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?

6) 2013 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? அமைக்கப்படவில்லை என்றால் எப்போது அமைக்கப்படும்?

7) தமிழ்நாட்டில் எத்தனை காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button