தென்காசி மாவட்டம் அறிவிக்கபட்டபின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் சமீரன் இவர் மாவட்டத்திற்க்கு வந்த பின்னர் படு வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் முடங்கி கிடந்த பல வேலைகள் செய்பட துவங்கியுள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டிய உடனே முதல் வேலையாக மாவட்டத்திற்க்கு பெருமை சேர்க்கும் குற்றால அருவிகளில் சுற்றுலாவாசிகளுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காகவும் கொரோனா காலங்களில் அனுமதிமறுக்கபட்ட அருவிகளை அனுமதி கொடுப்பதற்கான வேலைகளை முடுக்கிவிட்டார் இதனால் கடந்த இரண்டு நாட்களாக பராமத்து வேலைகள் பம்பரமாக இரவுபகல் பாராமல் நடை பெற்றுவருகிறது பணிகள் தொய்வு ஏற்படுவது போல் இருந்த இடங்களில் துறை ரீதியான அதிகாரிகளை அழைத்து கண்டிப்புடன் வேலை வாங்கிவருகிறார் இதுவரை அமைதியாக இருந்த மாவட்ட ஆட்சியர் தற்போது சாட்டையை சுழட்டி விட்டார் என்கிறார்கள் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் சபாஷ் ஆட்சியர் என்கிறார்கள் மாவட்ட மக்கள்
விசில் செய்திகளுக்காக சிறப்பு செய்தியாளர் சம்சுதீன்