செய்திகள்

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு-பாராட்டு தெரிவித்த எஸ்பி

*தென்காசி மாவட்டம்*

*தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர்,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு 14 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.. இத்தேர்வுக்கு மொத்தம் 13,831 ஆண்கள் மற்றும் 1,716 பெண்கள் உட்பட 15,547 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற எழுத்து தேர்வில் 12,836 ஆண்கள் மற்றும் 1406 பெண்கள் உட்பட மொத்தம் 14,242 நபர்கள் தேர்வெழுதியுள்ளனர்.. 995 ஆண்கள் மற்றும் 310 பெண்கள் உட்பட மொத்தம் 1305 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை..*

*எழுத்துத் தேர்விற்காக 09 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,16 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 1000 சட்டம் மற்றும் ஒழுங்கு காவலர்கள்,110 ஆயுதப்படை காவலர்கள்,60 சிறப்பு காவல் படை காவலர்கள்,மற்றும் 80 ஊர்க்காவல் படை காவலர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்..*

*தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் நுழையும் முன் செஞ்சிலுவை சங்கத்தினரால் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே தேர்வு மைய்யத்திற்குள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்..*

*தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களின் அவசர மருத்துவ சேவைக்காக தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தேர்வு மையங்களில் அருகில் அவசர ஊர்தி சேவை ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்..*

*14 தேர்வு மையங்களிலும் எந்த ஒரு அசம்பாவிதம் செயல்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பான முறையில் தேர்வு நடைபெற்று தற்போது விடைத்தாள்கள் சீல் இடப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது..*

*தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக தேர்வினை நடத்தி முடித்த காவல்துறையினருக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த மற்ற அரசு துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button