தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் சீர்காழியில் இன்று 13 12 2020 நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை ஏற்றார். 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் 18-ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது . அப்போராட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட வேன்கள் மூலமாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.