எஸ் கண்ணன் கரூர் செய்தியாளர்.
கரூர் 16.12.2020
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, போன்ற துறைகளுக்கு 627 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் துவங்கி வைத்தார்.
கரூர் நகராட்சி, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துறை போன்ற துறைகளின் சார்பில் 18 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மாவட்ட தொழில் மையம் போன்ற திட்டத்தின் கீழ்
35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் துவங்கப்பட்டது.
இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 780 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி சுமார் 11 ஆயிரத்து 760 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.