
பருவநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று இரவு முதல் சுற்றுலா வாசிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஐந்தருவி பழைய குற்றால அருவி போன்ற பகுதிகளில் குளிப்பதற்கு தடை ஏதும் இல்லை அங்கு அருவிகளில் நீர்வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா வாசிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்