தென்காசி மாவட்டம் செல்போனில் மொபைல் ஆப் ஒன்றை நிறுவி அதன் மூலம் சிறுவர்களையும் வயதானவர்களையும் ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளையும் பறித்துச் செல்லும் கும்பலை குற்றாலம் போலீசார் கைது செய்துள்ளனர்
கும்பல் மீது ஏற்கனவே தென்காசி குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து வருவதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் மும்முரமாக கடந்த ஆறு மாதங்களாக தேடிவந்தனர் இவர்களை பிடிப்பதில் சிம்மசொப்பனமாக இருந்துவந்தது இந்நிலையை இந்த வழக்கு சம்பந்தமாக குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்பின்னர் அவர் தனிப்பட்ட முறையில் தமது முயற்சியின் காரணமாக இன்று அதிகாலை அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்து உள்ளனர் அதில் ஒருவன் 18 வயதிற்கு உட்பட்ட இருந்ததால் அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை இந்த கும்பலை கைது செய்த குற்றாலம் ஆய்வாளர் சுரேஷ் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி உள்ளனர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து
கத்தி போன்ற பயங்கர பல ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காசிமேஜர்புரம் தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது தொடர்ந்து இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன இது போன்று தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குற்றவாளிகளில் ஒருவர் சிறுவன் என்பதால் அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை