உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் சந்தனம் பூசும் வைபவத்திற்காக, தமிழக அரசு வழங்கிய 20 கிலோ சந்தன கட்டைகள் இழைக்கும் பணி தீவிரம்.
உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்றுவரும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் வரும் 24ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக, தமிழக அரசு 20 கிலோ விலையில்லா சந்தனக் கட்டை வழங்கியுள்ளது. இதற்காக நாகூர் ஆண்டவர் தர்காவில் இன்று சந்தனம் அரைக்கும் பணி துவங்கியது. 40 நாட்கள் விரதம் இருக்கும் ஆண்டவரின் ஊழியர்கள் சந்தன கட்டைகளில் சுத்தமான பன்னீரை ஊற்றி அதனை இழைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டவர் சமாதியில் பூசப்படும் இந்த சந்தனங்கள் பக்தர்களுக்கு வருகின்ற 24 ஆம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வில் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சாகிப்மர்கள் சமது மற்றும் மவுலானா கூறும்போது சந்தன கட்டைகளை தமிழக அரசு வழங்கியதற்காகவும் , தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும், இந்த கொரோண காலங்களில் திருவிழாவின்போது எந்த அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்: ராஜேஷ்