9.1.மாநில மரம் பனை மரம் வெட்டுவதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் .
2.பனை நாள் ஜூலை மாதம் (பனம் பழம் உதிரும் காலம்) கடைப்பிடிக்கப்பட ஆவண செய்யவேண்டும்..
3. மானியத்துடன் கூடிய கடன் உதவித்தொகை மீனவர்களுக்கு நெசவாளர்களுக்கு போன்று பனைத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
4. பனைத் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
5. சொத்துக்களுக்கான அடங்களில் பனைமரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
6.நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு நிலங்கள் தனியார் நிலங்களில் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பனை மரங்கள் தனித்தனியே கணக்கெடுத்து மொத்த எண்ணிக்கை அறிவிக்கப்பட வேண்டும்.
7. அரசு கட்டடங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் தலைமைச் செயலகம் என அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் மாநில மரம் என்ற வகையில் இரண்டு மரங்களையேனும் முறையாக பராமரிக்கப்பட ஆவண செய்ய வேண்டும்.
8. ஆவின் பாலுக்கு இணையாக பனைத் தொழிலும் காதியிலிருந்து பிரித்து
“பனை வளத்துறை” என்ற வகையில் அதன் ஓலைப் பொருட்கள், பனை மூலம் பெறப்படும் பொருட்கள் ஆங்காங்கே நிலையங்கள் அமைத்து விற்பனை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும்.
9.பனை ஓலை பயிற்சி மையங்கள் பனைத் தொழில் சார்ந்த கல்லூரி மற்றும் பட்டயப் படிப்புகள் , பள்ளிப் பாடங்களில் பனை பற்றிய பாடப்பகுதிகள் போன்றவற்றால் விழிப்புணர்வு ஏற்படுத்தி , பனை சார்ந்த பயிற்சி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்மூலம் நெகிழிக்கு மாற்றாக இயற்கையான பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, 0 பனம்பழ இனிப்பு வகைகள், பனங்கிழங்கு உணவு வகைகள்,பனை ஓலைப் பொருட்கள் நார்ப்பொருட்கள் , பனை சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனைக்காக மாண்புமிகு தமிழக அரசால் கொண்டு வரப்படலாம்.
10. பனைத் தொழிலாளர்கள் மரம் ஏறும் சமயம் தவறி விழ நேரிட்டால் அவர்களுக்கான காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டு அளிக்கவும் ,உடலில் ஏற்படும் ஊனங்களுக்கு ஏற்ப இழப்பீட்டு தொகை , காப்பீட்டு தொகை மாற்றம் செய்ய வேண்டும். இறப்பிற்கான இழப்பீட்டுத் தொகை குறைந்தது ரூ. 5 முதல்7 இலட்சங்கள் வரையிலும் வயதுக்கேற்ப வழங்க ஆவண செய்ய வேண்டப்படுகிறது.
11.ஓய்வூதியத் தொகை ரூபாய்
1000/ வழங்கப்படுவதை உயர்த்தி ரூ.3000/வழங்க வேண்டப்படுகிறது.(ஏற்கனவே வழங்கப்படும் ரூபாய் 1000 என்பது முதியோருக்கும் என வழங்கப்படுவதாகவும் இதில் ஏதேனும் ஒன்றைப் பெறுவது என்பதால் ரூபாய் 1000 என்பது பனைத் தொழிலாளர்களுக்குஉரியதாகாது)
12. பனை வாரியத்திற்கான அனைத்து அசையும் ,அசையா சொத்துக்கள் அனைத்தும் கதர் வாரியத்தில் இருந்து பனை வளத்துறை என்று தனியே
அமைக்கப்பட்டு அதில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
13. பனை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருந்தது ஆண்டுதோறும் புதுப்பித்தல் என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற பழைய முறையிலோ அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ என அந்தந்த மாவட்டங்களில் அதற்கான துறைவாரியாக வழங்கிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என. வேண்டப்படுகிறது
14. ரேஷன் கடையில் பனை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யவும் அரசு ஆவண செய்ய வேண்டப்படுகிறது.
15. பனை பொருள் பயிற்சி முடித்த நபரை மாவட்ட சம்மேளனங்களுக்கு நியமிக்க வேண்டப்படுகிறது.
16. கள் தடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
17 .கள் இறக்குபவர்கள் மீது விஷ சாராயம் என பொய்யாக வழக்கிடுவதை நீக்கி கள் என்பதையே குறிப்பிட வேண்டும் .
18 .கள் விற்பனையை உரிமம் பெற்ற பனைத் தொழிலாளர்கள் மூலம் விற்பனை செய்யவும் அல்லது அரசால் ஏற்படுத்தப்படும் நிலையங்களில் விற்பனை செய்யவும்
அல்லது அரசே பனைத் தொழிலை ஏற்று நடத்தவும் வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக அரசுக்கு வேண்டுகோளாக முன்வைக்கப்படுகிறது.
படை இளவரசி கவிதா காந்தி
நிறுவனத்தலைவர்
கவிதா உதவி ஆலோசனை அறக்கட்டளை
மற்றும்
பனையெனும் கற்பகத்தரு