எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர். கரூர் 06-01-2021
கரூரில் இளைஞர் ஒருவரை பட்டப்பகல் கோவில் வாசலில் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் வெட்டி ஆணவ படுகொலை.
கரூர் காமராஜபுரம் சாலையைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன் (22 ) சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேலன் தேவி என்வரது மகளை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஹரிஹரன் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலித்த பெண்ணின் பெற்றோர் ஹரிஹரனை மாதங்களாக பேச்சுவதை நிறுத்திக் நிறுத்திக் கொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளனர்.
இதையடுத்து ஹரிகரன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததாகவும் பெண்ணும் அரியணை பெற்றோரிடம் ஹரிஹரன் தான் திருமணம் செய்து கொள்வேன் எனது பெற்றோர் என்னை வற்புறுத்தி வருவதாக ஹரிஹரனின் தாயிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று ஹரிஹரனை பெண்ணின் குடும்பத்தார் ஹரிஹரனின் காதலியிடம் ஹரிஹரனுக்கு போன் செய்து கரூர் ஈஸ்வரன் கோயில் அருகே வரச் சொல்லியுள்ளனர். அப்போது ஹரிஹரனுடன் அந்த பெண்ணின் குடும்பத்தார் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட ஐந்துக்கு மேற்ப்பட்ட நபர்கள் ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக குத்தியுடன் உனக்கு என் பெண் கேட்கிறதா என்று பொதுமக்கள் முன்னிலையில் கூறிக்கொண்டே அடித்து உதைத்த காணொளியில் வெளியாகியுள்ளது. மேலும் ஹரிஹரனை அடித்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்து வந்து அவர்களை அவர்கள் காரில் தூக்கிச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹரிகரன் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் நகரில் பட்டப்பகலில் பிரசித்தி பெற்ற கோவில் வாசல் முன்பு வெட்டி ஆணவ படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.