பிப்ரவரி.5, இன்று சட்ட சபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பதிலுரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறது.
சல்லிக்கட்டு போராட்டத்தின் போது, உணர்வுப் பூர்வமான நிலையில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேட்டியளித்த தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் திரு. மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
எங்களது கோரிக்கையை தாயுள்ளத்தோடு மறுபரிசீலனை செய்து அவற்றை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.