வேதாரண்யம் பகுதியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் ஓ எஸ் மணியன்.
வேதாரணியம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஓ எஸ் மணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை நாகை வந்த அமைச்சரை வேளாங்கண்ணி நகர செயலாளர் சாம்சன், இளைஞர் அணி ஒன்றிய இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ராமராஜன் உட்பட ஏராளமான கட்சிப் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் ஓ எஸ் மணியன், தனக்கு மீண்டும் இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், வேதாரணியம் தொகுதியில் மக்களுக்கு உபயோகமான பல திட்டங்களை கொண்டு வருவதாகவும் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் ஓ எஸ் மணியன் தொடங்கினார்.
செய்திகளுக்காக நாகைநிருபர் :ராஜேஷ்