
தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில் பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்ற்னர். இதனால் அங்கு அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது. ஆகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற பகுதிகளில தேவையான போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.