நாகூரில் மூடப்பட்ட அஞ்சலக அலுவலகம் – மக்களின் பயன்பாட்டிற்க்கு திறக்க கோரி நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் கோரிக்கை
கொரானா அலை காரணமாக குறிபிட்ட மணி நேரம் இயங்கி வந்த அஞ்சலகங்கள நேற்று நாகூரில் திடீரென மூடப்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானர்கள்.
இது சம்பந்தமாக நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்க நிர்வாகிகள் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் தலைமை அஞ்சலக அலுவலரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
சங்கம் சார்பாக மணு கொடுக்கப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது. நாகூரில் 3 அஞ்சலக அலுவலகம் உள்ளது. ஒன்று மெயின் ரோட்டிலும் ஒன்று, நாகூர் தர்காவுக்கு அருகிலும் புதுமனை தெருவில் ஒன்றும் உள்ளது. இதில் புது மன தெருவிலும் நாகூர் தர்காவிற்கு அருகிலும் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் தங்களது சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல விஷயங்களுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் தற்பொழுது கோவிட் கால சூழ்நிலை அனுசரித்து தினமும் 3 மணி நேரம் மட்டும் செயல்பட்ட இந்த அஞ்சலக அலுவலங்கள் குறிப்பாக இந்த இரண்டு அஞ்சல் அலுவலகங்கள் தற்பொழுது மூடப்பட்டுள்ளது.
இதனால் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் உள்ளவர்கள் நாகூர் மெயின் ரோட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல தள்ளப்படுகின்றனர். மெயின்ரோடு அதிகமான தூரமாக இருப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல இயலவில்லை. இதனால் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கி அதில் பணம் எடுக்க மிகவும் சிரமமாகும். மற்றும் பிற காரியங்களுக்காக அஞ்சலகம் செல்வது சிரமமாக உள்ளது.
ஆகையால் நாகூரில் உள்ள நாகூர் தர்கா அஞ்சலக அலுவலகம் அல்லது புதுமனை தெருவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து செயல்படுமாறு சாஹிப்மார்கள் சங்கம் சார்பாக கோரப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ச. ராஜேஷ்