தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் விவசாயம்வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் நேற்று விதைநெல் வாங்குவதற்கு சுற்றுவட்டார கிராமத்திலுள்ள விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூட்டம்கூட்டமாக விதைகளை வாங்கிச் சென்றனர். இத்தகைய சாயிகள் சமூக இடைவெளியை கடை
பிடிக்கவில்லை என்று ஒருசில விவசாயிகள் குறை கூறினர. ஒரு சிலர் முககவசம் அணியாமல் வந்திருந்தனர். ஆனால் அருகில் நின்ற காவல்துறை அதிகாரிகள் இதனை கவனிக்காமல் சாலையில் வருகிறவர்களை கண்டித்துஎச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். இதில் ஒரு சில வாகன ஓட்டிகள் கூட்டம் கூட்டமாக நிற்கிற இடத்தில் சமூக இடைவெளி கிடையாது அத்தியாவசிய தேவைகளுக்கு வருபவர்களை போலீசார் கண்டித்து அனுப்புகின்றனர் புலம்பி சென்றதைசென்றதை காண முடிந்தது