28.5.2021 சுமார் 4 மணியளவில் கூடலூர் வழிக்கடவு சாலையில் நாடுகாணி எல்லையை தாண்டியுள்ள 2-வது வளைவில் உயிர் இழக்கும் நிலையில் இருந்த ஓட்டுநரை CBR எனும் உயிர்காப்பு முறையில் காப்பாற்றியுள்ளனர் மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் திரு.சத்யமூர்த்தி மற்றும் உடனிருந்த உதவி ஆய்வாளர் திரு. மரைக்காயர் ஆகியோர் உயிர்பிழைக்க வைத்துள்ளனர்.
கூடலூரிலிருந்து கோளா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கேரள மாநில பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அபிலாஷ் என்பவர் நினைவை இழந்து உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக அதுவழியாக நீலகிரி மாவட்ட க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் திரு. சத்யமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் திரு.மரைக்காயர் ஆகியோர் ரோந்துப் பணிக்கு சென்றுள்ளனர்.
சம்பவத்தை பார்த்த இவர்கள் துரிதமாக செயல்பட்டு மார்பில் கைகளால் அழுத்தம் கொடுத்து CBR எனும் உயிர்காப்பு முறையின் மூலம் அவரை உயிர்பிழைக்கச் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள பூக்கோட்டும் பாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கேரளா உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கையில் விடத்துக்குள்ளானவர் பெயர் அபிலாஷ் என்றும் அவர் பாலக்காடு கொழிஞ்ஞம்பாறை பகுதியை சேர்ந்தவரென்றும் தெரியவந்தது.
CBR உயிர்காப்பு முறையில் துரிதமாக ஓட்டுநரின் உயிர்காத்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இளைஞரின் உயிரை மீட்டெடுத்த இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி அவர்களுக்கும் சப் இன்ஸ்பெக்டர் மரைக்காயர் அவர்களுக்கும் சமூக வலைத்தலங்களிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை வட்டாரத்திலும் பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவர்களும் உதவி ஆய்வாளர் மறக்கார் அவர்களும் நமது திருச்சி பிஆர்எஸ் 97வது முதல் பேட்ச் நண்பர்களாவார்கள்.