கோக்கு மாக்கு

மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன் கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக புதிதாக மருத்துவர்கள் செவிலியர்கள் பல்நோக்கு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் 6 கிலோ லிட்டர் (6டன்) கொள்ளவு கொண்ட 18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்த வைத்தார். பின்னர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ சேவையாற்ற புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியாளார்களுக்கு பணிநியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்; கூறுகையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை ;பாதுகாக்கும் வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிதாக 6 டன்கிலோ லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் தற்போது உள்ள 160 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கொடுப்பதோடு புதிதாக கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும். கொரோனா நோயாளிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்லாமல் மயிலாடுதுறையிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவதற்காக 18 மருத்துவர்கள், 62 செவிலியர்கள், 32 பல்நோக்கு பணியாளர்கள், லேப்டெக்னிஷியன் 3 பேர் உட்பட பல்வேறு பணிகளுக்கு என்று 121 பேர் போர்க்கால அடிப்படையில் பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பாதித்த பகுதிகளுக்கு வீட்டிற்கு சென்று சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். 6 மாட்டங்களில் சிசிசி மையங்கள் தொடங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை 54 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உயிரை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.

செய்தியாளர் : ச. ராஜேஷ்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button