விவசாயி போல் வேடம் அணிந்து கொரானா குறித்த விழிப்புணர்வு நடனமாடி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாகை நகர காவல் ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நாகை நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் பெரியசாமி இவர் கொரானா தொற்று குறித்து கிராமப்புற மக்களிடம் அலட்சியம் தொடர்வதால் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தார். இதனையடுத்து தன் கைப்பேசியில் கொரானா தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல்களை பதிவு செய்த அவர் தனது காவல்துறை வாகனத்தை விழிப்புணர்வு பாடல்களை ஒலி பரப்பி வருகிறார்
இந்நிலையில் நாகப்பட்டனம் நகராட்சிக்குட்பட்ட கீரைகொல்லை தெரு என்னுமிடத்தில் ஆய்வாளர் பெரியசாமி விவசாயி போல் வேடம் அணிந்து கையில் மண்வெட்டி உடன் சிவாஜி நடித்த கௌரவம் படத்திலிருந்து பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலை கொரனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி நடனமாடி விவசாய பணியை முடித்துவிட்டு மாஸ்க் அணியாமல் நடமாடுவது போன்றும் அப்போது கொரோனா வேடமணிந்த காவலர்கள் விவசாயி நோய் தொற்றி பாதிக்கப்பட்டு சாலையில் மயங்கி விழுந்தது போன்று தத்ரூபமாக நடித்து நடித்துக் காட்டினர் மேலும் சமூக இடைவெளியை பின்பற்றிமுக கவசம் அணிந்துகூடியிருந்த மக்களிடம் கைகளை நீட்டி கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான உறுதிமொழி ஆய்வாளர் வாசிக்க அதனை பொதுமக்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து பல்வேறு வகையில் நோய் தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நாகை நகர காவல்துறை ஆய்வாளர் பெரியசாமியின் செயல் காவல் துறை மட்டுமின்றி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
செய்தியாளர் :ச.ராஜேஷ்