திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா அருள் ( 35 ). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் துவாகுடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்குடி சோதனை சாவடியில் பணி வழங்கப்பட்டிருந்து.
இதனையடுத்து நேற்று உடல்நிலை சரியில்லை காரணத்தினால் விடுமுறை வேண்டுமென்று ஆயுதப்படை உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு தற்போது திருவெறும்பூர் டிஎஸ்பி பொறுப்பில் உங்களை பணியமர்த்தி உள்ளதாகவும், அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காவலர் ஜோஸ்வா அருள் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் அவர் இன்று விடுப்பு எடுத்துள்ளார். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்று தெரிவித்ததால் அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி தேவராயநேரி அடுத்த புதுக்குடி சோதனைச் சாவடி பணிக்கு வந்த ஜோஸ்வா அருள் சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக சக காவலர்கள் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்