*அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்!: டிரம்பின் நிர்வாக உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!!*
வாஷிங்டன்: டிக் டாக், வி சாட் செயலிகளை தடை செய்வதற்கான முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். சீன மொபைல் செயலிகளான டிக் டாக், வி சாட் போன்றவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், அவற்றிற்கு தடை விதித்தார். புதியதாக இந்த செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே டிரம்ப்பின் ஆணைக்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்த நிலையில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுகளை நீக்கி தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் டிக் டாக், வி சாட் போன்ற சீன செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா? என்பதை கண்காணிக்கும் படியும் பைடன் உத்தரவிட்டிருப்பது குறிபிடத்தக்கது.
செய்தியாளர் சென்னை
எஸ்பி பாஸ்கரன்