தூத்துக்குடி
மாவட்டம்தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இன்று இரவு 7 மணி அளவில் பள்ளிவாசல் அருகே பைக்கில் சென்ற போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியது.
அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மார்ட்டின் அதே இடத்தில் பலியானார் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஊரில் சில பிரச்சினைகளில் தலையிட்டு பேசியது தொடர்பாக அவருக்கு முன் பகை இருந்ததாகவும் அதன் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்கள்
வீரமணி ஷேக் மதார்