மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் உடல் நலனில் அக்கறைகொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இலத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் திருமதி. நூர் ஜஹான் அவர்களின் மூலம் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
தென்காசி செய்தியாளர்
முத்துச்செல்வம்