ச.ராஜேஷ்
நாகை மாவட்ட நிருபர்
நாகை அருகே வேளாண்துறை வாகனத்தில் மதுபானம் கடத்திய வேளாண்துறை ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது: ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லை வழியாக சாராயம் மற்றும் மது பானங்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஆரோக்கியடோனிஸ்மேரி தலைமையில் போலீசார் திட்டச்சேரியை அடுத்த நடுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான வாகனத்தையிம் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த பாண்டி சாராயம் 200 பாட்டில்கள், 154 குவட்டர் மதுபாட்டில்கள், 4 புல் பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஜீப் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் 55 என்பதும், அவருடன் வந்தவர் வேளாண்துறையில் உதவியாளராக பணியாற்றும் அம்பிகாபதி என்பதும் தெரியவந்தது. மேலும் மதுபானங்களை விற்பனைக்காக காரைக்காலில் இருந்து கீழ்வேளூருக்கு கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வாகனத்திலேயே மதுபானம் கடத்தி இருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.