கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்
கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்
என கல்வியின் மேன்மையை முன்னாள் முதல்வர் கருனாநிதி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்
கல்வி போதனையின் கருவாக விளங்கும் ஒரு நூலகம் இன்று சமூக விரோதிகளின் கூடாரமாக உயர்ந்து நிர்க்கின்றது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி ஒரு காலத்தில் கேரளா சாம்ராஜ்யத்தில் இருந்தது
தற்ப்போது தமிழகம் கேரளா என இரு மாநிலங்களின்
இனைப்பு எல்லையாக இருக்கிறது செங்கோட்டை
இதுவே இன்றுவரை எல்லோராலும் பார்டர் என அழைக்கபட்டு வருகிறது
பம்ப்ஹவுஸ் என அழைக்கபடும் பகுதியில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பல கல்வி மேதைகளை உருவாக்கும் படிகட்டுகளாய் இருந்த நூலகம் இன்று …
பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து சமூக விரோதிகள் தங்கும் உல்லாச தளமாகவே இருக்கிறது
அரசு கவனத்தில் எடுத்து கொண்டு இந்த சிறப்புமிக்க நூலகத்தை மீண்டும் உருவாக்கி பொது மக்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
விசில் செய்திகளுக்காக குற்றாலத்தில் இருந்து வீரமணி